வாழ்த்து

இறை வாழ்த்து

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  திருவருட்பா எழுதியவர் யார்?

திருவருட்பா எழுதியவர் வள்ளலார் இராமலிங்க அடிகள்.

2.  வள்ளலார் எங்குப் பிறந்தார்?

சிதம்பரத்துக்கு அருகில் உள்ள மருதூரில் பிறந்தார்.

3.  வள்ளலாரின் பெற்றோர் யாவர்?

தாய் சின்னம்மை, தந்தை இராமையா.

4.  வள்ளலாரின் காலம் யாது?

1823 முதல் 1874 வரை.

5.  வள்ளலார் ஏற்படுத்திய அமைப்பு யாது?

சத்திய ஞான சபை.

6.  அருள் மணம் வீசுபவர் யார்?

இறைவன்

7.  இறைவன் எப்படிப்பட்டவன்?

இறைவன் பேரொளியானவன்.

8.  கரும்புச்சாறு எத்தன்மை உடையது?

கரும்புச்சாறு இனிப்புச் சுவை உடையது.

9.  வள்ளலார் தம்மைப் பற்றி என்ன கூறுகிறார்?

கடையனேன், துரும்பினேன். அதாவது எல்லாரிலும் தாழ்ந்தவன்; மிகச் சிறியவன் என்று கூறுகிறார்.

10.  வள்ளலார் இறைவனை எவ்வாறு புகழ்கிறார்?

இறைவன் பேரொளியாக, மலராக, கரும்புச் சாறாக, தங்கமாக எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று வள்ளலார் புகழ்கிறார்.