மொழி வாழ்த்து
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. தமிழ் வாழ்த்து என்ற பாடல் இடம்பெற்ற நூல் ----------.
தமிழ் வாழ்த்து என்ற பாடல் இடம்பெற்ற நூல் பூங்கொடி
2. உயிரே என்று முடியரசனார் குறிப்பிடுவது----------------- ஆகும்.
உயிரே என்று முடியரசனார் குறிப்பிடுவது தமிழ் ஆகும்.
3. முடியரசனார் தமிழுக்குத் தம்மை ----------------- என்று குறிப்பிடுகிறார்.
முடியரசனார் தமிழுக்குத் தம்மை மகன் என்று குறிப்பிடுகிறார்.
4. தமிழர்க்குப் பெறற்கு அரிய செல்வம் ------------------- ஆகும்.
தமிழர்க்குப் பெறற்கு அரிய செல்வம் தமிழ் ஆகும்.
5. முடியரசனார் -------------- என்ற ஊரில் பிறந்தார்.
முடியரசனார்பெரியகுளம் என்ற ஊரில் பிறந்தார்.
6. எல்லா மொழிகளிலும் தமிழ்மொழி -------------- நிற்கின்றது.
எல்லா மொழிகளிலும் தமிழ்மொழி தலை சிறந்து நிற்கின்றது.
7. தமிழை விட ----------------- தருவது வேறு எதுவும் இல்லை.
தமிழை விட இன்பம் தருவது வேறு எதுவும் இல்லை.
8. நாம் தமிழை -------------- வேண்டும்.
நாம் தமிழை(பணிந்து) வணங்க வேண்டும்.
9. பெறற்கரிய -------------- தமிழ்.
பெறற்கரியசெல்வம் தமிழ்.
10. தாள் என்ற சொல் குறிப்பது --------------- .
தாள் என்ற சொல் குறிப்பது திருவடிகள்