வாழ்த்து

உலக வாழ்த்து

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  'தமிழன் இதயம்' என்ற நூலை எழுதியவர் யார்?

அ) பாரதியார்

ஆ) நாமக்கல் கவிஞர்

இ) புரட்சிக்கவிஞர்

ஈ) சுரதா

ஆ) நாமக்கல் கவிஞர்

2.   ஒரு நாடு வளர எது வேணடும்?

அ) கைத்தொழில்

ஆ) வழிபாடு

இ) போராட்டம்

ஈ) அரசியல்

அ) கைத்தொழில்

3.   வணிகம் வளர்ந்தால் ஒரு நாடு என்னவாகும்?

அ) செழிப்படையும்

ஆ) வலிமை அடையும்

இ) போர் செய்யும்

ஈ) பசிப்பிணி மறையும்

அ) செழிப்படையும்

4.   நாட்டு மக்கள் அச்சமின்றி அன்பு கொண்டு வாழ வேண்டும் என்று சொன்னவர் யார்?

அ) கண்ணதாசன்

ஆ) வைரமுத்து

இ) நாமக்கல் கவிஞர்

ஈ) கம்பர்

இ) நாமக்கல் கவிஞர்

5.   நாம் வலிமை பெற்றுத் தெளிவு கொண்டு வாழ்ந்தால் நம்மைத் தேவர்கள் என்ன செய்வார்கள்?

அ) வணங்குவார்கள்

ஆ) வாழ்த்துவார்கள்

இ) போற்றுவார்கள்

ஈ) பாராட்டுவார்கள்

இ) போற்றுவார்கள்

6.   எல்லோரும் அச்சமின்றி வாழத் தேவையானது எது?

அ) அறிவு

ஆ) அன்பு

இ) வலிமை

ஈ) பண்பு

ஆ) அன்பு

7.   தேச பக்திப் பாடல்கள் என்ற நூலை எழுதியவர் யார்?

அ) தேசியக்கவிஞர்பாரதியார்

ஆ) அழ.வள்ளியப்பா

இ) வெ.இராமலிங்கனார்

ஈ) மருதகாசி

இ) வெ.இராமலிங்கனார்

8.   ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்கிய கவிஞர் யார்?

அ) புரட்சிக் கவிஞர்

ஆ) உவமைக் கவிஞர்

இ) நாமக்கல் கவிஞர்

ஈ) பட்டுக்கோட்டையார்

இ) நாமக்கல் கவிஞர்

9.   தேவ உலகத்தில் உள்ளவர்களும் போற்றும்படி வாழச் சொன்னவர்

அ) கண்ணதாசன்

ஆ) திருநாவுக்கரசர்

இ) நாமக்கல் கவிஞர்

ஈ) நம்மாழ்வார்

இ) நாமக்கல் கவிஞர்

10.  உலகம், நாடு, தமிழகம் என்று வரிசையாக வாழ்த்தியவர் யார்?

அ) கம்பர்

ஆ) இளங்கோவடிகள்

இ) கணியன்பூங்குன்றனார்

ஈ) நாமக்கல் கவிஞர்

ஈ) நாமக்கல் கவிஞர்