மொழி வாழ்த்து
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

கவிஞர் முடியரசனார்.
இவர் 7.10.1920இல் மதுரைக்கு அருகில் உள்ள பெரியகுளம் என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் சுப்பராயலு. தாயார் பெயர் சீதாலட்சுமி. இவருடைய இயற்பெயர் துரைராசு. இவரின் துணைவியார் பெயர் கலைச்செல்வி.
இவர் வீரகாவியம், முடியரசன் கவிதைகள், பூங்கொடி முதலிய நூல்களை எழுதியுள்ளார் இவருக்கு 1965ஆம் ஆண்டு குன்றக்குடி அடிகளார் கவியரசு என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினார்.
நமக்குப் பாடமாக உள்ள தமிழ் வாழ்த்து பூங்கொடி என்ற நூலில் உள்ளது.