பல்சுவைப் பாடல்கள்

அபிராமி அந்தாதி

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  அந்தம் என்றால் என்ன?

அந்தம் என்றால் முடிவு என்று பொருள்,

2.  ஆதி என்றால் என்ன?

ஆதி என்றால் தொடக்கம் என்றுபொருள்

3.  அபிராமி அந்தாதியை எழுதியவர் யார்?

அபிராமி அந்தாதியை எழுதியவர் அபிராமி பட்டர்.

4.  எவற்றை அபிராமியின் கடைக்கண்கள் தரும் என்று அபிராமி பட்டர் கூறுகிறார்?

செல்வம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் சோர்வு அடையாத மனம் தரும், ஒளி பொருந்திய உருவம் தரும், வஞ்சம் இல்லாதவர்களின் நட்பைத் தரும் என்று கூறுகின்றார்.

5.  நல்லன எல்லாம் தருவது எது?

நல்லன எல்லாம் தருவது அபிராமியின் கடைக்கண்கள் ஆகும்.

6.  அபிராமி அந்தாதியில் மொத்தம் எத்தனைப் பாடல்கள் உள்ளன?

அபிராமி அந்தாதியில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளன.

7.  அபிராமி எழுந்தருளியுள்ள ஊரின் பெயர் என்ன?

அபிராமி எழுந்தருளியுள்ள ஊரின் பெயர் திருக்கடையூர்.

8.  அந்தாதி என்றால் என்ன?

ஒரு பாடலின் முடிவு அல்லது இறுதி அடி அடுத்த பாடலின் தொடக்கமாக வந்து பாடப்பெறும் 100 பாடல்களுக்கு அந்தாதி என்று பெயர்.

9.  அபிராமி பட்டர் எந்த ஊரில் பிறந்தார்?

திருக்கடையூர்.

10.  அபிராமி அந்தாதி எந்தவகை இலக்கியம்?

அபிராமி அந்தாதி சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.