பல்சுவைப் பாடல்கள்

தமிழ் விடு தூது

பாட அறிமுகம்
Introduction to Lesson


ஒருவர் ஒரு செய்தியை மற்றவருக்குச் சொல்ல இப்போது பல வழிகள் உள்ளன. கடிதம் மூலம் செய்தியைத் தெரிவிக்கலாம். தொலைபேசி மூலம் பேசலாம். இப்படிப் பல வழிகள் உள்ளன.

ஆனால் பழைய காலத்தில் மனிதர்களே நேரில் சென்று செய்திகளைச் சொல்லி வந்தனர். இதற்குத் தூது என்று பெயர்.

இது தவிர பறவை, விலங்கு மூலமாகவும் செய்திகள் சொல்லப் பெற்றன. அவைகளால் செய்திகளைச் சொல்ல முடியாது. செய்திகள் உள்ள கடிதத்தை எடுத்துச் செல்ல முடியும்.

இங்கு ஒரு பெண் தமிழ்மொழியைத் தூதாக அனுப்புகிறாள், தமிழ் மொழி அப்பெண்ணின் அன்பை மதுரைக் கோயிலில் உள்ள சொக்கநாதருக்குச் சொல்வதற்காக அனுப்பப் பெறுகிறது.

அப்பெண் தமிழ்மொழி வளர்ந்த நிலையைக் கூறும் பகுதி இங்குப் பாடமாக உள்ளது.