அபிராமி அந்தாதி
பயிற்சி - 3
Exercise 3
1. தனம் என்னும் சொல் குறிப்பது எதனை?
அ) புகழ்
ஆ) செல்வம்
இ) கல்வி
ஈ) பண்பு
ஆ) செல்வம்
2. தளர்வறியா மனம் தரவல்லது எது?
அ) அபிராமி அருள்பார்வை
ஆ) சிவபெருமான் அன்புப்பார்வை
இ) கண்ணனின் கனிவான பார்வை
ஈ) கன்னியின் கடைப்பார்வை
அ) அபிராமி அருள் பார்வை
3. அபிராமி அந்தாதியின் ஆசிரியர் யார்?
அ) அபிராமி பட்டர்
ஆ) குங்கலயப் பட்டர்
இ) திருமால் பட்டர்
ஈ) சண்முகப் பட்டர்
அ) அபிராமி பட்டர்
4. வஞ்சமிலா இனம் தருவது எது?
அ) அபிராமியின் அருள்வாக்கு
ஆ) அபிராமியின் கடைக்கண்கள்
இ) அபிராமியின் திருவருள்
ஈ) அபிராமியின் குளிர்முகம்
ஆ) அபிராமியின் கடைக்கண்
5. தெய்வவடிவம் என்று அபிராமி பட்டர் குறிபிடுவது எதனை?
அ) கடவுள் உருவம்
ஆ)ஒளி பொருந்திய உடம்பு
இ) வானுருவம்
ஈ) அரம்பையின் வடிவம்
ஆ) ஒளிபொருந்திய உடம்பு
6. அபிராமி பட்டர் பிறந்த ஊர் எது?
அ) திருவெண்ணெய் நல்லூர்
ஆ) திருக்காட்டுப் பள்ளி
இ) திருக்கடையூர்
ஈ) திருவட்டாறு
(இ) திருக்கடையூர்
7. அந்தாதியில் இடம் பெறும் பாடல்களின் எண்ணிக்கை
அ) 40
ஆ) 1300
இ) 400
ஈ) 100
ஈ) 100
8. திருக்கடையூரில் எழுந்தருளியுள்ள தெய்வத்தின் பெயர் என்ன?
அ) மீனாட்சி
ஆ) காமாட்சி
இ) அபிராமி
ஈ) கருமாரிஅம்மன்
(இ) அபிராமி
9. அபிராமியை வணங்கினால் நமக்கு எது தரும்?
அ) புகழ்
ஆ) நல்லன
இ) கல்வி
ஈ) நண்பர்களை
(ஆ) நல்லன
10. அபிராமியை எத்தெய்வம் என்று கூறலாம்?
அ)காவல் தெய்வம்
ஆ)படைப்புத் தெய்வம்
இ) பெண் தெய்வம்
ஈ) கன்னித் தெய்வம்
(இ) பெண் தெய்வம்