முத்தொள்ளாயிரம்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. முத்தொள்ளாயிரம் யாருடைய பெருமையைக் கூறுகிறது?
சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் பெருமையைக் கூறுகிறது.
2. சோழர்களின் தலைநகர் எது?
சோழர்களின் தலைநகர் உறையூர்.
3. முத்தொள்ளாயிரம் குறிப்பிடும் சோழன் பெயர் என்ன?
கிள்ளி வளவன்.
4. சோழன் கிள்ளியின் களிறு எங்கே கால் வைத்தது?
சோழன் கிள்ளியின் யானை சினம் கொண்டு, காஞ்சிபுரம், ஈழம், உச்சயினி நாடுகளின் மீது காலடி வைத்தது.
5. தஞ்சையை வளப்படுத்தும் ஆறு யாது?
தஞ்சையை வளப்படுத்தும் ஆறு காவிரி
6. ஈழத்தின் தற்போதைய பெயர் என்ன?
ஈழத்தின் தற்போதையப் பெயர் இலங்கை.
7. முத்தொள்ளாயிரம் கூறும் கருத்துகள் யாவை?
போர்யானையின் வீரம்.
8. முத்தொள்ளாயிரம் எழுதிய ஆசிரியர் யார்?
முத்தொள்ளாயிரம் எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
9. சுவை எட்டனுள் முத்தொள்ளாயிரம் சிறப்புடன் எச்சுவையைச் சொல்கிறது?
வீரச் சுவையைப் பற்றி முத்தொள்ளாயிரம் சிறப்புடன் சொல்கிறது.
10. முத்தொள்ளாயிரம் எதனுடைய வீரத்தை முன்னிலைப் படுத்திக் கூறுகிறது?
கிள்ளியின் பட்டத்து யானையின் வீரத்தை முத்தொள்ளாயிரம் முன்னிலைப்படுத்திக் கூறுகிறது.