பல்சுவைப் பாடல்கள்

அபிராமி அந்தாதி

பாடல்
Poem


தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வு அறியா

மனம்தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமிலா

இனம்தரும் நல்லனஎல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

- அபிராமி பட்டர்