அபிராமி அந்தாதி
பாட அறிமுகம்
Introduction to Lesson
அபிராமி என்ற தெய்வத்தின் மீது பாடப்பட்டது, அபிராமி அந்தாதி. இதை எழுதியவர் அபிராமிபட்டர். இது நூறு பாடல்களைக் கொண்டது. இதில் உள்ள 69 ஆம் பாடல் நமக்குப் பாடமாக உள்ளது.
அந்தாதி என்பதை அந்தம்+ஆதி என்று பிரிக்கலாம். அந்தம் = முடிவு. ஆதி = தொடக்கம். ஒரு பாடலின் முடிவு அடுத்த பாடலின் தொடக்கமாக அமையும். இது போன்று நூறு பாடல்களும் அமையும்.
நூறு பாடல்களையும் மறக்காமல் தொடர்ந்து சொல்ல, நினைவு வைத்துக்கொள்ள அந்தாதி முறை பயன்படுகிறது.
"தனம் இல்லையே" என்பது இதற்கு முன் உள்ள பாடலின் (68 ஆம் பாடலின்) முடிவுச் சொல். இச்சொல்லில் இருந்து “தனம் தரும்” என்னும் இப்பாடல் தொடக்கம் பெறுகிறது.
“கண்களே” என்று இப்பாடல் முடிகிறது. இச்சொல் அடுத்த பாடலின் (70 ஆம் பாடலின்) தொடக்கமாக உள்ளது. “கண் களிக்கும்” என்று அப்பாடல் தொடங்குகிறது.
இதுவே அந்தாதி முறை ஆகும்.