பல்சுவைப் பாடல்கள்

தமிழ் விடு தூது

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  தமிழ் மொழியைப் போற்றும் நூல் எது?

தமிழ் மொழியைப் போற்றும் நூல் தமிழ் விடு தூது.

2.  தமிழ் விடு தூது நூலை எழுதியவர் யார்?

தமிழ் விடு தூது நூலை எழுதியவர் பெயர் தெரியவில்லை

3.  தமிழ் எழுத்துகள் ஓலையில் எவ்வாறு படிக்கப் பெறுகின்றன?

மஞ்சள் இட்டு. மையிட்டுப் படிக்கப் பெறுகின்றன.

4.  பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் என்ன செய்கிறார்கள்?

பள்ளியில் சிறுவர்கள் ஒன்று கூடித் தமிழைப் படிக்கிறார்கள்.

5.  தமிழைத்தூதாக அனுப்பியவர் யார்?

ஒருபெண் தமிழைத் தூதாக அனுப்பினாள்

6.  தமிழ் யாரிடம் தூதாகப் போனது?

மதுரையில் உள்ள இறைவனிடம் தமிழ் தூது போனது

7.  தமிழ் விடு தூதில் தமிழ் எவ்வாறு குளித்தது?

தமிழ் விடு தூதில் தமிழ் மஞ்சள்பூசிக் குளித்தது

8.  தமிழ் உண்ட பால் எது?

தமிழ் முப்பால் உண்டது

9.  தமிழ் எதை இட்டுக் கொண்டது?

தமிழ் மையை இட்டுக் கொண்டது

10.  தமிழ்த்தாய் எந்தத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டப் பெறுகிறாள்?

தமிழ்த்தாய் சிறுகுழந்தைகளின் பள்ளிகூடப் பைகளாகியத் தொட்டிலில் தாலாட்டப் பெறுகிறாள்