முத்தொள்ளாயிரம்
பாட அறிமுகம்
Introduction to Lesson
சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களையும் பாடும் இலக்கியம் முத்தொள்ளாயிரம். இதனை எழுதியவர் பெயர் அறியக் கிடைக்கவில்லை.
வீரம் என்பது எட்டுவகையான சுவைகளுள் ஒன்று. இந்தச் சுவைதரும் பாடல்கள் பல தமிழில் உள்ளன. யானையின் வீரத்தைக் கூறும் முத்தொள்ளாயிரம் பாடல் ஒன்று இப்பாடத்தில் இடம்பெறுகிறது.
இந்தப் பாடலைப் படிக்கும் பொழுது யானையின் வீரமும் தெரியும், யானையின் வீரநடையும் தெரியும். நம் உள்ளமும் வீரம் என்ற சுவையைப் பெறும்.