அபிராமி அந்தாதி
பாடல் கருத்து
Theme of the Poem
"அபிராமி" என்பது ஒரு பெண் தெய்வம். இத்தெய்வத்தின் தலையில் பூக்கள் இருக்கும். இத்தெய்வத்தினுடைய கண்கள் நம்மீது பட்டாலே பல செல்வங்கள் கிடைத்து விடும்.
இப்பெண் தெய்வத்தின் கண்கள், பணம் தரும். கல்வியைத்தரும். ஒருநாள் கூட துன்பம், சோர்வு இல்லாத மனத்தைத் தரும். இத் தெய்வத்தின் வடிவு அழகைக் காட்டும். உள்ளத்தில் தீமை இல்லாமல் இருக்கும் நண்பர்களைத் தரும். புகழ் தரும். நல்லன எல்லாம் தரும்.
இவை எல்லாம் தருபவள் அபிராமி. அவளை வணங்குவோம்.