பல்சுவைப் பாடல்கள்

தமிழ் விடு தூது

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  தமிழ் விடு தூதில் தூதுப் பொருளாக விளங்குவது எது?

அ) கிளி

ஆ) தமிழ்

இ) முகில்

ஈ) அன்னம்

(ஆ) தமிழ்

2.  தமிழ் விடு தூதின் ஆசிரியர் யார்?

அ) தெரியவில்லை

ஆ) சொக்கநாதர்

இ) பரணர்

ஈ) காளமேகம்

அ) தெரியவில்லை

3.  அசை என்ற சொல்லின் பொருள் என்ன?

அ) சொல்

ஆ) மன்றம்

இ) பலகை

ஈ) குழு

ஈ) பலகை

4.  தால் என்பதன் பொருள் யாது?

அ) முகம்

ஆ) பல்

இ) செவி

ஈ) நாக்கு

ஈ) நாக்கு

5.  கிடத்தி என்பதன் பொருள் யாது?

அ) இட்டு

ஆ) நீட்டி

இ) நுழைத்து

ஈ) பழக்கி

அ) இட்டு

6.  தாய் போன்ற சிறப்பு உடையது எது?

அ) நாடு

ஆ) உலகு

இ) தமிழ்

ஈ) உயிர்

இ) தமிழ்

7.  தமிழ் விடு தூதில் தமிழைத் தாலாட்டுபவர்கள் யார்?

அ) சிறு குழந்தைகள்

ஆ) மக்கள்

இ) தாயர்

ஈ) தந்தையர்

அ) சிறுகுழந்தைகள்

8.  தூது இலக்கியத்தில் மஞ்சள் பூசிக் குளித்தது யார்?

அ) தமிழ்

ஆ) மனிதர்கள்

இ) தெய்வங்கள்

ஈ) ஆண்கள்

அ) தமிழ்

9.  தமிழ் யாரிடம் தூது சென்றது?

அ) அரசனிடம்

ஆ) இறைவனிடம்

இ) முனிவரிடம்

ஈ) வள்ளலிடம்

ஆ) இறைவனிடம்

10.  தமிழ் அருந்திய பால் எது?

அ) ஆவின் பால்

ஆ) தாயின் பால்

இ) முப்பால்

ஈ) முக்கனிச்சாறு

இ) முப்பால்