தமிழ் விடு தூது
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. தமிழ்மொழி நம்............................. போன்றது.
தமிழ்மொழி நம் தாய்போன்றது
2. தமிழைச் சிறுவர்கள் ........................... வளர்க்கிறார்கள்.
தமிழைச் சிறுவர்கள் பள்ளிக்கூடத்தில் வளர்க்கிறார்கள்
3. தமிழ்மொழி மிக்க ........................... உடைய மொழி ஆகும்.
தமிழ்மொழி மிக்க பழமை உடைய மொழி ஆகும்.
4. குளிப்பாட்டிய பிறகு தமிழுக்கு ........................... இடப்படுகிறது
குளிப்பாட்டிய பிறகு தமிழுக்கு மைஇடப்படுகிறது.
5. தமிழ்விடு தூது தமிழின் ................................. கூறுகிறது.
தமிழ் விடு தூது தமிழின் பெருமையைக் கூறுகிறது
6. தமிழ் ........................... அருந்தி வளர்கிறது.
தமிழ் முப்பால்அருந்தி வளர்கிறது.
7. தமிழைச் ............................. தாலாட்டுகிறார்கள்.
தமிழைச் சிறுகுழந்தைகள் தாலாட்டுகிறார்கள்.
8. தமிழ்விடு தூது ........................... வகையைச் சார்ந்தது.
தமிழ்விடு தூது சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.
9. தமிழ்விடு தூது ஆசிரியர் பெயர் .........................
தமிழ்விடு தூது ஆசிரியர் பெயர் தெரியவில்லை
10. அசையில் இடுதல் என்பதன் பொருள் .............................. இடுதல் ஆகும்
அசையில் இடுதல் என்பதன் பொருள் தொட்டிலில்இடுதல் ஆகும்.