பல்சுவைப் பாடல்கள்

பல்சுவைப் பாடல்கள்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே!

தமிழ் இலக்கியங்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவன. அவற்றைப் படிப்பதால் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்; வீரம், நகைச்சுவை, அழுகை, சிரிப்பு முதலிய பல இலக்கியச் சுவைகளைப் (இன்பங்களைப்) பெறலாம்.

இப்பகுதியில் பல்சுவை தரும் சில பாடல்கள் தரப்படுகின்றன.

ஒரு மனிதரையோ, விலங்கையோ, பறவையையோ அல்லது முகில், தென்றல், மொழி முதலியவற்றையோ தூது அனுப்புவதாகப் பாடும் இலக்கிய வகைக்குத் தூது இலக்கியம் என்று பெயர்.

இது தவிர பறவை, விலங்கு மூலமாகவும் செய்திகள் சொல்லப் பெற்றன. அவைகளால் செய்திகளைச் சொல்ல முடியாது. ஆனால் அவை செய்தி சொல்வதாகத் தூது இலக்கியத்தி்ல் கற்பனையாகப் பாடுவார்கள்.

தூது இலக்கியத்தில் தூது செல்லும் மனிதரின் அல்லது பொருளின் சிறப்புகளைச் சொல்லுவார்கள். தமிழ்விடு்தூதில் தூது செல்லும் தமிழ்மொழியின் சிறப்புகள் சொல்லப் பெறும் பகுதி நமக்குப் பாடமாக உள்ளது.