பல்சுவைப் பாடல்கள்

முத்தொள்ளாயிரம்

பாடல் கருத்து
Theme of the Poem


உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டவர்கள் சோழர்கள். அவர்களில் சிறப்பு மிக்கவன் கிள்ளி. அவனது பட்டத்து யானை மிகுந்த வீரம் உடையது. போரில் விருப்பம் உடையது. அந்த யானை கோபம் கொண்டது.

எல்லா நாடுகளுக்கும் சென்றது. அங்கு எல்லாம் வெற்றி பெற்றது.

காஞ்சிபுரத்திற்குச் சென்றது; வெற்றி பெற்றது. கங்கை ஆறு ஓடும் உச்சயினிக்குச் சென்றது. வெற்றி பெற்றது. இலங்கைக்குச் சென்றது. வெற்றி பெற்றது.

இவ்வாறு சென்ற இடங்கள் எல்லாம் அதற்கு வெற்றிகள் கிடைத்தன. இதனைப் புலவர் "ஒருகாலைக் காஞ்சிபுரத்தில் வைத்தது; வெற்றி பெற்றது. இன்னொரு காலை உச்சயினியில் வைத்தது; வெற்றி பெற்றது. இன்னொரு காலை இலங்கை நாட்டில் வைத்தது; வெற்றி பெற்றது. நான்காவது காலை வைக்க இடம் தேடுகிறது." என்று வீரச் சுவை தருமாறு பாடுகிறார்.