அபிராமி அந்தாதி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. அபிராமி அந்தாதியை எழுதியவர் ........................................
அபிராமி அந்தாதியை எழுதியவர் அபிராமி பட்டர்
2. அபிராமி பட்டர் ........................................ என்ற ஊரில் வாழ்ந்தார்.
அபிராமி பட்டர் திருக்கடையூர் என்ற ஊரில் வாழ்ந்தார்.
3. அந்தாதிப் பாடலில் முதல் அடியின் இறுதிச்சொல் அடுத்த அடியின் ........................................ சொல்லாக வரும்.
அந்தாதிப் பாடலில் முதல் அடியின் இறுதிச்சொல் அடுத்த அடியின் முதல் சொல்லாக வரும்.
4. தனம் தருவதும், கல்வி தருவதும் அபிராமியின் ........................................
தனம் தருவதும், கல்வி தருவதும் அபிராமியின் கடைக்கண்கள்
5. அந்தாதி நூல் ................... பாடல்களைக் கொண்டது.
அந்தாதி நூல் 100 பாடல்களைக் கொண்டது.
6. கனம் என்ற சொல்லின் பொருள்....................
கனம் என்ற சொல்லின் பொருள் புகழ்
7. அபிராமி தெய்வத்தின் ஓரப் பார்வை கிடைத்த ஒருவர்க்குக் .................. தரும்.
அபிராமி தெய்வத்தின் ஓரப் பார்வை கிடைத்த ஒருவர்க்குக் கல்வி தரும்.
8. பாடல்களை மறவாது மனத்தில் நினைவில் கொள்ள ...................... முறை சிறந்தது.
பாடல்களை மறவாது மனத்தில் நினைவில் கொள்ள அந்தாதிமுறை சிறந்தது.
9. அபிராமியின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்....................
அபிராமியின் மீது மிகுந்த பக்தி கொண்டவர் அபிராமி பட்டர்
10. அபிராமி தளர்வு அறியா .......................... தருவாள்.
அபிராமி தளர்வு அறியா மனம்தருவாள்.