தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • வடிவழகிய நம்பி திருக்கோயில் - திரு அன்பில்

        நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
        நாகத் தணையரங்கம் பேர் அன்பில் - நாகத்
        தணைப் பாற் கடல் கிடக்கு மாதி நெடுமால்
        அணைப் பார் கருத்தனாவன்
         (2417) - நான்முகன் திருவந்தாதி - 36

    குடந்தை யென்னும் கும்பகோணத்திலும் வெஃகா வென்னும்
    காஞ்சிபுரத்திலும், திருஎவ்வுள் என்ற திருவள்ளூரிலும், அரங்கம் என்ற
    ஸ்ரீரங்கத்திலும், பேர் என்ற திருப்பேர் நகரிலும், அன்பிலாகிய, இந்த
    திருவன்பில் தலத்திலும், நாகத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள்
    வேறுயாருமல்ல அவன்தான் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டுள்ள
    ஆதி நெடுமாலாகும். அவன் தன்னை ஆராதிப்பவர்களை அணைத்துக்
    காப்பவனுமாவான், என்று திருமழிசை ஆழ்வாரால் பாடப்பட்ட இத்தலம்
    ஸ்ரீரங்கத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது.

    டோல்கேட்டில் இருந்தும், திருச்சியிலிருந்தும், லால்குடியிலிருந்தும்
    செல்லலாம். திருப்பேர் நகர் என்று அழைக்கப்படும் (அப்பக்குடத்தான்)
    சன்னிதியிலிருந்து கொள்ளிட நதிக் கரையை கடந்து நடந்தே வந்தால்
    சுமார் 2 கி.மீ. தூரம் தான் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:01:32(இந்திய நேரம்)