தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • கோபாலகிருஷ்ணப்பெருமாள் கோவில் - திருக்காவளம்பாடி

        ஏவிளங் கன்னிக் காகி
        இமையவர் கோனைச் செற்று
        காவளம் கடிதிறுத்துக்
        கற்பகம் கொண்டு போந்தாய்
        பூவளம் பொழில்கள் சூழ்ந்த
        புரந்தரன் செய்த நாங்கை
        காவளம் பாடி மேய
        கண்ணனே களை கனீயே
             (1305) பெரியதிருமொழி 4-6-8

    என்று     திருமங்கையாழ்வாரால்     பாடப்பட்ட     இத்தலம்
    திருநாங்கூரிலேயே உள்ளது. இதுவும் ‘திருநாங்கூர் திருப்பதிகளுள்
    ஒன்று சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது.
    திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் திருநகரியிலிருந்தும் நடந்தே வரலாம்.

    கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசூரனையழித்தான்.
    இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த
    பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான். வெகுநாளைக்குப்
    பின்பு இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா
    கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன்
    கொடுக்க மறுத்தான். எனவே சினங் கொண்ட கண்ணன் அவனோடு
    பொருது அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான். 11
    எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான்
    (சிவனை ஒன்றாக்கி முடிந்தபின்) தான் இருக்க காவளம் போன்ற
    பொழிலைத் தேடினான். இந்தக் காவளம் பாடியில் நின்றுவிட்டான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:13:14(இந்திய நேரம்)