தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • சுகந்தவனநாதன் திருக்கோவில் - திருஇந்தளூர்

      ஆசை வழுவா தேத்து
      மெமக்கிங் கிழுக்காய்த்து - அடியோர்க்கு
      தேசமறிய உமக்கே
      யாளாய்த் திரிகின்றோமுக்கு
      காசினொளியில் திகழும்
      வண்ணம் காட்டீர் எம்பெருமான்
      வாசி வல்லீர் இந்த
      ளூரீர் வாழ்ந்தே போம்நீரே
          பெரியதிருமொழி 4-9-4 (1331)

  என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் மயிலாடுதுறை
  (மாயவரம்) நகரத்திலேயே அமைந்துள்ளது. இந்தளூர் என்றால்
  பலருக்குத் தெரியாது. மாயவரம் பரிமள ரெங்கன் கோயில் என்றால்
  எல்லோருக்கும் தெரியும்

  நவக்கிரகங்களில் ஒருவனான சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு
  தோஷத்தைப் போக்குதற்காக இந்த தலத்தில் எம்பெருமானைக் குறித்து
  தவமியற்றி தோஷம் நீங்கப் பெற்றதாகத் தல வரலாறு.

  (தோஷம் இன்னதென அறியுமாறில்லை) சந்திரனுக்கு இந்து என்ற
  ஒரு பெயர் உண்டு. தனக்கு தோஷம் நீங்கப்பட்ட இத்தலம் தனது
  பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என சந்திரன் வேண்டிக்கொள்ள
  இந்தளூர் ஆயிற்றென்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:03:15(இந்திய நேரம்)