தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • கள்வர் பெருமான் கோவில் - திருக்கார்வானம்

        நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
        நிலாத்திங்கள் துண்டத்தாய், நிறைந்தாய, கச்சி
        ஊரகத்தாய், ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்
        உள்ளுவாருள்ளத் துள்ளாய், உலகமேத்தும்
        காரகத்தாய் கார் வாளத்துள்ளாய், கள்வா
        காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
        பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
        பெருமான் உன் திருவடியே பேணி னேனே
                (2059) திருநெடுந்தாண்டகம் 8

    என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
    இத்திவ்ய     தேசம் உலகளந்த     பெருமாள்     சன்னதியாகிய
    திருவூரகத்தினுள்ளேயே இருக்கிறது. திருக்கார் வானம் எவ்விடத்து
    இருந்தது என்பதை அறியுமாறில்லை. இதுவும் ஆய்வுக்குரிய
    விஷயமாகும். அதே போன்று திருக்கார்வானம் என்னும் சொல்லும்
    புதிதாகும். கார்மேகத்தான் என்று எம்பெருமானுக்குப் பெயருண்டு.
    ஆனால் கார்வானத்தான் என்றுண்டோ. உண்டு. நம் தெய்வத்
    தீந்தமிழில் அவனுக்கு கார்வானத்தான் என்றும் திருப்பெயர்,
    ஆழ்வாரின் அமுதவாக்கிலிருந்து வந்திருக்கிறது.

    கார்வானத்துள்ளாய் கள்வா என்று இத்தலத்து எம்பெருமானின்
    பெயரையும் சேர்த்தே ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார்.
    திருவூரகத்திற்குள்ளே இருக்கும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் மற்ற
    இருவருக்குமில்லா தனிச் சிறப்பாகும் இது. நீரகத்தாய் என்றும்,
    காரகத்தாய் என்றும் மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த
    திருமங்கை இந்த திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது
    மட்டும் எம்பெருமானின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம்
    செய்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:11:46(இந்திய நேரம்)