34. யாழ் கைவைத்தது

    இதன்கண் : பிரச்சோதன மன்னன் தன் மகளாகிய வாசவ தத்தைக்கு உதயணனை ஆசிரியனாக்கி யாழ் பயிற்றுவிக்கக்
கருதுதலும் உதயணனைப் பெரிதும்   பாராட்டுதலும், தன் உளக் கிடையைச் சிவேதன் என்னும் அமைச்சனுக்குக் கூறி
உதயணன் பாற் கூறிவித்தலும், அது கேட்ட உதயணன் ஆராய்ந்து தெளிந்து அத்தொழிற்குடன் படுதலும், அவன் உடன்
பாடறிந்த மன்னன் மகிழ்ந்து இசை மன்றம் அமைத்தலும், உதயணனை அழைத்து யாழாசிரியனாக்குதலும் வாசவதத்தை
அணிசெய்து கொண்டு இசை மன்றமேறி உதயணனை வணங்குதலும் உதயணன் அவளை யாழ் பயில்விக்கத் தொடங்குதலும்
பிறவுங்   கூறப்படும்.
 




5
 பொழில்தலைப் பெயர்ந்த புலம்புகொல் காலை
 எழின்மணி விளக்கின் ஏமம் போகிக்
 கலையினும் களியினும் காமுறக் கவைஇய
 மழலைக் கிண்கிணி மடவோர் மருட்டப்
 புரிதார் நெடுந்தகை பூஅணை வைகிய
 திருவீழ் கட்டில் திறத்துளி காத்த
 வல்வேல் சுற்றத்து மெய்ம்முறை கொண்ட
 பெயர்வரி வாசனை கேட்டபின உயர்திறல்
 

10




15
 ஊழின் அல்லது தப்புதல் அறியார்
 காலனும் கடியும் நூலொண் காட்சியர்
 யாக்கை மருங்கின் காப்புக் கடம்பூண்டு
 அருந்துறை போகிய பெருந்தகை யாளர்
 உணர்வும் எளியும் ஊக்கமும் உணர்ச்சியும்
 புணர்வின் செல்வமும் போகமும் சிறப்ப
 அமிழ்தியல் யோகத்து அஞ்சனம் வகுத்துக்
 




20

 கமழ்கொள் பூமியில் கபிலை முன்நிறீஇ
 மகடூஉத் துறந்த மாசறு படிவத்துத்
 துகள்தீ ராளர்க்குத் துளக்கிய முடியன்
 மலர்கண் அளைஇய மந்திர நறுநீர்
 பலருடன் வாழ்த்தப் பண்உளி எய்திப்
 பால்பரந்து அன்ன வால்வெள் விதானத்து
 மாலை தொடர்ந்த மங்கலப் பந்தர்
 விரிநூல் அந்தணர் வெண்மணை சூழ்ந்த
 திருமணிக் கட்டில் திறத்துளி எய்தி

 
25




30

 அறநிலை பெற்ற வருள்கொள் அவையத்து
 நிறைநூல் பொத்தக நெடுமணை ஏற்றி
 வல்லோர் வகுத்து வாசனை வாக்கியம்
 பல்லோர் பகரப் பயம்பல பருகித்
 தரும விகற்பமொடு தானை ஏற்பும்
 கரும விகற்பமொடு காமமும் கெழீஇய
 இன்பக் கேள்வி இனிதுகொண்டு எழீஇத்

 



35

 துன்பம் நீங்கும் தொழின்முறை போக்கி
 முடிகெழு மன்னரொடு முற்றவை நீங்கிக்
 கடிபெரும் கோயிலுள் காட்சி விரும்பி
 உதயண குமரனை உழைத்தரல் விரைந்தென
 உழைநிலை யாளடு ஓடினர் இசைப்ப

 
 

 இழையணி இரும்பிடி எருத்தம் ஏறிக்
 கடையணி ஆவணம் கைதொழப் போதந்து
 எறிவேல் பெருங்கடை இயைந்தனன் நிற்பத்

 
40




45

 தருமணன் முற்றத்துத் தானெதிர் சென்று
 திருமணி அம்பலம் கொண்டுஒருங்கு ஏறி
 இரட்டைத் தவிசின் இருக்கை காட்டி
 இசைக்க வேண்டா இதையுனது இல்லெனச்
 சிறப்புடைக் கிளவி செவ்விதில் பயிற்றித்
 தளரியல் ஆயமொடு தன்புடை நின்ற
 பணியோள் பற்றிய பவழச் செப்பின்
 வாச நறுந்திரை வகுத்துமுன் நீட்டித்
 தாமரை அங்கையில் தான்பின் கொண்டு
 குறிப்பின் இருக்க குமரன் ஈங்கென

 
50




55

 மடக்கிடன் மனமொடு மாநகர் புக்குத்
 தான்பயில் வீணை தங்கையும் ஒருத்தி
 காண்குறை உடைமையில் கவலும் ஆதலின்
 வல்லோர்ப் பெறாது தொல்குறை உழத்தும்
 தாயும் யானும் எந்தை யாதலில்
 தீதொடு வரினுந் தீர்த்தறன் கடனென
 மதியொண் காட்சி மாமுது சிவேதனை
 இதுநங் குறையா இசைத்தி சென்றென

 
 

 நல்வினை யம்பலத்து இருந்த நம்பிக்கு
 வல்லிதின் அக்குறை உரைத்த பின்னர்

 
60




65




70

 அதற்கோர் உபாயம் அறியாது இருந்தோன்
 மகள்குறை யுணர்ந்து மன்னவன் விடுத்த
 திருமணி வீணை இசைத்தலுந் தெருமந்து
 ஒருநிலை காறு முள்ளே யொடுக்கி
 விழுப்பமொடு பிறந்த வீறுயர் தொல்குடி
 ஒழுக்கங் காணிய வுரைத்ததை ஒன்றுகொல்
 ஒளிமேம் பட்டனன் ஒன்னான் என்றெனை
 அளிமேம் படீஇய எண்ணிய தொன்றுகொல்
 உள்ள மருங்கின் உவத்தது செய்தல்
 செல்வ மன்னவன் சீலங் கொல்லோ
 யாதுகொல் மற்றிவ் வேந்தல் பணியென

 




75




80




85

 நீதி மருங்கின் நினைவ அவன்சூழ்ந்து
 தியாதெனப் படினும் படுக இவன்பணி
 மாதரைக் காட்டுதல் மங்கலம் எனக்கென
 நெஞ்சு.........................தங்கூறி
 அஞ்சொல் ஆயத் அன்றியான் கண்ட
 தாமரை முகத்தி தலைக்கை யாகப்
 பல்பெருந் தேவியர் பயந்த மகளிருள்
 நல்லிசை யார்கொல் நயக்கின் றாள்எனச்
 சொல்லினன் வினவுஞ் சுவடுதனக்கு இன்மையின்
 யாரே யாயினும் இவன்மகள் ஒருத்தியைச்
 சீர்கெழு வீணை சிறப்பொடு காட்டிப்
 பயிற்சி உள்வழிப் பல்லோர் வருதலின்
 அழித்ததும் ஒருநாள் அன்றியான் கண்ட
 கதிர்மதி முகத்தியைக் காண்டலும் உண்டென
 முதிர்மதிச் சூழ்ச்சியின் முற்ற நாடிச்

 




90

 செய்யன் ஆகிச் சிறுமை நாணின்
 உய்யேன் ஆதல் ஒருதலை அதனால்
 உயிர்கெட வருவழி ஒழுக்கங் கொள்ளார்
 செயிரறு கேள்வி தேர்ந்துணர்ந் தோரென
 வெல்லினும் தோற்பினும் விதியென வகுத்தல்
 பொருள் நூல் ஆயும் புலவோர் துணிவென
 மதிவழி வலித்த மனத்த னாகி

 


95




100

 என்னிதற் படுத்த நன்நுதன் மாதரைப்
 பேரும் பெற்றியுந் தேரு மாத்திரம்
 நேர்வது பொருளென நெஞ்சு வலியுறீஇச்
 செறுநரைப் போலச் சிறையில் தந்துதன்
 சிறுவரைப் போலச் செய்தோன் முன்னர்த்
 தவன்முறை ஆயினும் தன்மனம் உவப்பன
 இயல்முறை ஆற்றி என்கடன் தீர்ந்த
 பின்னர் ஆகுமென் பெயர்முறை என்ன

 
 

 ஆன்பால் தெண்கடல் அமுதுற வளைஇய
 தேன்பெய் மாரியில் திறிறவ தாகப்
 பருகு வன்ன பயத்தொடு கெழீஇ
 உருகு வன்ன உவகையன் ஆகி

 
105




110

 இறந்தனன் இவனென விளிப்பரந் துறாது
 சிறந்தனன் இவனெனச் செவ்வன் நோக்கிக்
 கடந்தலை வைக்குங் காலம் இதுவென
 அவன்தலை வைக்கும் ஆணை ஏவலும்
 உவந்ததை எல்லாம் உரைமின் நீரெனப்
 பேர்ந்தனன் விடுப்பப் பெருமூ தாளன்
 நேர்ந்ததை எல்லாம் நெடுந்தகைக்கு உரைப்பத்

 



115




120

 திருமலி ஆகத்துத் தேவியர் பயந்த
 நங்கையர் உள்ளும் மங்கை முற்றாப்
 பெதும்பை ஆயத்துப் பேதையர் வருகெனப்
 பளிக்கறைப் பூமியும் பந்தெறி களத்தும்
 மணிக்கயிற்றுச மறலிய ஊடத்தும்
 கொய்ம்மலர்க் காவும் பொய்கைக் கரையும்
 அந்தக் கேணியும் வந்துபெயர் கூவித்
 தவ்வை மகளிரும் தாய்கெழு பெண்டிரும்
 அவ்வழி ஆயமு நொய்தகப் படுப்ப

 




125

 முத்தின் அருத்தியர் மும்மணிக் காசினர்
 கச்சினர் கண்ணியர் கதிர்வெள் வளையினர்
 சில்கலத்து இயன்ற அணியினர் அல்லது
 பல்கலம் சேரா மெல்லென் யாக்கையர்
 அசைவில் குமரரை ஆடிடத் தணங்கு
 நசையுள் கொண்ட நன்மை இயன்று
 விழுத்தகைத் தெய்வம் வழுத்தா மரபில்
 தர்ப்பொலி மேனிக் கூர்ப்பணங் கொடுக்கிய
 மண்டு தணிதோள் மாசின் மகளிர்

 
130




135




140
 பெண்டுணை சார்வாக் கண்டுழிக் கலங்கிக்
 கடைக்கண் சிவப்புங் கதிர்முலை உருப்பும்
 மடக்காக் கூழையும் மருங்குலும் பற்றிப்
 புதையிருந் தன்ன கிளரொளி வனப்பினர்
 அரங்கொல் கிண்கிணி இரங்க ஒல்கிப்
 பொற்கிடுகு செறிந்து போர்வை முற்றி
 முத்துக்காழ் தொடர்ந்த சித்திரக் கூடத்துப்
 பவழக் கொடுங்காழ் பத்திமுகத்து அழுத்தித்
 திகழ்கோட்டு இயன்ற திமிசுகுடப் பொற்கால்
 உரிமைச் சுற்றத்து உரியோர்க்குத் திறந்த
 திருமணி யம்பலத்து இமிழ்முழாத் ததும்பும்
 அரங்கம் நண்ண அரிமா சுமந்தி
 



145

 மரகதத்து இயன்ற மணிக்கால் கட்டில்
 நூல்வினை நுனித்த நுண்தொழி லாளர்
 வாலரக் கூட்டிய வானூன் நிணவைப்
 பால்பரந் தன்ன பஞ்சி மெல்லணைச்
 சேக்கை மெலியச் செம்மாந் திருந்த
 முடிகெழு தந்தை முன்னர்த் தோன்றி
 அடிதொழு திறைஞ்சிய அவரிடை யெல்லாம்

 

150




155

 தெய்வத் தாமரைத் திருமகட் கெடுத்தோர்
 ஐயப் படூஉ மணியிற் கேற்ப
 ஒண்மையு நிறையும் ஓங்கிய ஒளியும்
 பெண்மையும் பெருமையும் பிறவும் உடைமையில்
 பாசிழை ஆயத்துப் பையென நின்ற
 வாசவ தத்தை வல்லள் ஆகென
 ஊழ்முறை பொய்யாது கருமம் ஆதலின்
 யாழ்முறைக் கருமம் இவளதென்று அருளி

 



160




165

 மற்றவண் நின்ற பொன்தொடி மகளிரைக்
 குற்றமில் குறங்கில் கோ...வலம் ஏற்றிக்
 கோதை மார்பின் காதலின் ஒடுக்கிப்
 பந்தும் கிளியும் பசும்பொன் தூதையும்
 கந்தியன் மயிலும் கரந்துறை பூவையும்
 கண்ணியும் கழங்கும் கதிர்முலைக் கச்சும்
 வண்ண முற்றிலும் பவழப் பாவையும்
 தெளித்தொளி பெறீஇய பளிக்குக்கிளிக் கூடும்
 அவரவர் மேயின அவ்வயின் அருளி
 அடிசில் வினையும் யாழின் துறையும்
 கடிமலர்ச் சிப்பமும் கரந்துறை கணக்கும்
 வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும்
 கற்றவை எல்லாம் காட்டுமின் எமக்கென

 
170

 மருளி ஆயம் மருளொடும் போக்கி
 நங்கை கற்கும் மங்கலக் கருவிக்கு
 நியம விஞ்சனம் அமைமின் விரைந்தென
 ஈன்ற தாயும் என்மகட்கு இத்தொழில்
 மாண்டது என்று மனத்திற் புகல

 
175




180

 மழலைக் கிண்கிணிக் கழலோன் பெருமகன்
 அரும்பெறல் தத்தைக்கு ஆசான் ஆகிப்
 போக வீணை புணர்க்கப் பெற்ற
 தேசிக குமரன் றிருவுடை யன்என
 அடியரும் மாயமும் நொடிவனர் வியப்ப
 ஏனைத் தாயரும் ஆனாது ஏத்த
 வத்தவர் பெருமகன் வல்ல வீணை
 தத்தை தனக்கே தக்க தாலென
 வேட்டது பகருங் கோட்டி யாகிக்
 கோட்டமின் முற்றங் குமிழ்குமிழ்த் துரைப்பப்

 
185




190

 பொன்னகல் கொண்ட பூவும் புகையும்
 அவ்வகல் கொண்ட அவியும் பிரப்பும்
 செம்முது செவிலியர் கைபுனைந்து ஏத்திச்
 சந்தன நறுநீர் மண்ணுறுத்து ஆட்டி
 மறுவில் வெண்கோட்டு மங்கலம் பொறித்த
 பெருவெண் சீப்பில் திருவுற வாரிச்
 சுருண்முறை வகுத்துச் சூட்டுப் புரியுறீஇக்
 கருங்குழல் கட்டிக் கன்னிக் கூழை
 பொன்னின் நாணில் புடையெடுத்து யாத்துப்

 

195




200




205

 பதரில் செம்பொன் காயழ லுறுத்த
 கதழ்வுறு சின்னஞ் சிதறிய மருங்கில்
 திருநுதல் சுட்டி திகழச் சூட்டி
 முத்தக் கலனணி மொய்ம்புறச் சேர்த்துப்
 பொன்செய் ஓலையொடு பூங்குழை நீக்கி
 மணிச்செய் கடிப்பிணை மட்டஞ் செய்து
 தேய்வுற்று அமைந்த திருவெள் ளாரத்
 தேக விடுகொடி யெழில்தோ ளெழுதிக்
 கச்சியாப் புறுத்த கால்வீங்கு இளமுலை
 முத்த வள்ளியொடு மும்மணி சுடர
 மணிக்காற் பா...........கவைஇத்
 தணிப்பொற் றேரைத் தகையொளி சுடர

 




210




215

 மட்டங் குயின்ற மங்கல அல்குல்
 பட்டுடைத் தானைப் பைம்பூண் சுடரத்
 திருமுகை முருக்கின் விரிமலர் கடுப்பச்
 செறிமலர் படினும் சீறடி நோமென
 நெறியெனப் படுத்த நிலப்பெரும் தவிசின்
 உள்ளகத் தொடு............மெல்லடி
 அரிப்பொன் கிண்கிணி ஆர்ப்ப அரங்கின்
 உழைச்சென் மகளி ருக்க மேற்றிச்
 சித்திரம் பயின்ற செம்பொன் ஓலை
 முத்துவாய் சூழ்ந்த பத்திக் கோடசை இச்
 சிரற்சிற கேய்ப்பச் சிப்பம் விரித்த
 கவற்றுவினைப் பவழம் கடைந்துசெய் மணிக்கை
 ஆல வட்டம் நாலொருங் காடப்
 பொன்னிய லாய்வளைக் கன்னிய ரசைப்பப்

 
220




225

 பொத்தின் றமைந்த புனைவிற் றாகிச்
 சொத்துற்று அமைந்த சுதையில் செஞ்சுவர்
 வெண்கோட்டு நெடுந்தூண் விதானம் தூக்கித்
 தேநவின்று ஓங்கிய திருநாறு ஒருசிறைக்
 கீத சாலை வேதி நிறைய
 மல்லல் சுற்றமொடு கல்லெனப் புகுதந்து
 அரக்குப் பூமி ஆயமொடு ஏறிப்
 பரப்புமலர் ரொருசிறைப் பாவையை நிறீஇப்

 


230

 பண்ணமை நல்லியாழ்ப் பலிக்கடன் வகீஇய
 அண்ணல் வருகென அவ்வயின் ஓடி
 ஒண்தொடி மகளிர் கொண்டகம் புகுதரத்
 தானைத் தவிசில் தகையோன் ஏற
 ஏனைத் தவிசில் நங்கையை இருத்தினர்
 இன்னாள் என்பது இவனும் அறியான்

 


235




240

 ........................
 நன்னர்க் கிளவி நயவாப் பயிற்றி
 ஆசான் கொடுக்கும் அரும்பெறல் விச்சை
 காண்போர் செய்யும் கடப்பாடு இதுவென
 வெள்வளை முன்கை தோழியர் பற்றி
 ஒள்ளிழை மாதர் ஒழுக்கஞ் செய்கெனக்
 காந்தள் அழித்த கைம்முகிழ் கூப்பிக்
 கஞ்சிகை திறந்த பொழுதின அன்றுதன்

 




245

 காட்சிக் கொத்த கள்வன் ஆதலின்
 மேற்படு நோக்கமொடு இருவரும் எய்தி
 ஏப்பெறு துயரமொடு இலங்கிழை இறைஞ்சிப்
 பொற்கால் படுத்துப் பூந்துகில் வளைஇக்
 கைக்கோல் சிலதரொடு கன்னியர் காப்பத்
 தெய்வத்து அன்ன திறலோன் காட்டக்
 கைவைத் தனளால் கனங்குழை யாழ்வுன்.