தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • கஜேந்திரவரதர் திருக்கோவில் - திருக்கவித்தலம்
    சிறப்புக்கள்
    1. மகாபாரதத்தினும் காலத்தால் முந்திய திருமழிசையாழ்வாரால்
      மங்களாசாசனம் செய்யப்பட்டதும் இதன் தொன்மைக்குச் சான்று.

    2. கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ மாற்றமும் சாரா
      வகையறிந்தேன் ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும்
      மாயன்     உரைகிடக்கும் உள்ளத் தெனக்கு     என்பது
      திருமழிசையாழ்வாரின் பாடல்.

      இப்பாவினில் வரும் ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்ற
      பெயரே பெருமானுக்கு வழங்கி வருகிறது.

    3. 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி
      கொடுத்தது இந்த ஒரு ஸ்தலத்தில்தான்.

    4. “விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய் வெள்ளெயிறுறவதன்
      விடத்தினுக் கணுங்கி அழுங்கிய ஆனையின ருந்துயர் கெடுத்த...”

      என்று யானைக்கு பெருமாள் அருளிய நிகழ்ச்சியை தொண்டரடிப்
      பொடியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:10:43(இந்திய நேரம்)