தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • ஆதிவராகப்பெருமாள் கோவில் - திருக்கள்வனூர்
    வரலாறு

    ஒரு சமயம் சிவனுக்கும் பார்வதிக்கும் தர்க்கம் உண்டாகி விவாதம்
    வளர அதனால் சினமுற்ற சிவன் பார்வதியை சபிக்க பார்வதி சிவனிடம்
    மன்னிப்பு வேண்ட சிவ கட்டளைப்படி பார்வதி ஒரு காலால் நின்று
    வாமனரை நோக்கித் தவம் செய்து சிவபெருமானை அடைந்ததாக
    ஐதீஹம்.

    இவ்விடத்தில் ஒரு சமயம் லட்சுமி தேவியும் பார்வதியும்
    சம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் மஹாவிஷ்ணு மறைந்திருந்து
    கேட்டதாகவும் இதையறிந்த காமாட்சி எம்பெருமானைக் கள்வன் என்று
    அழைத்ததால் பெருமாளுக்கு இவ்விடத்தில் கள்வன் என்று திருநாமம்
    ஏற்பட்டதாயும் கூறுவர்.

    இவ்விதம் காமாட்சி கூறியதைக் கேட்ட எம்பெருமான் தன்னை
    சற்றே மறைத்துக்கொள்ள அந்நேரத்தில் இங்கு பலகாலமாக பதுங்கி
    இருந்து (தனக்கேற்பட்ட சாப விமோசனத்தால்) வெளிப்பட்ட அரக்கன்
    ஒருவன் - இரண்டு தேவியரையும் அச்சுறுத்த பார்வதி உடனே
    திருமாலைத் துதிக்க அந்த அரக்கனோடு எம்பெருமான் பொருதார்.

    அவன் படுத்துக்கொண்டே புழுதியை வாரி இறைத்து பயங்கரமாக
    பொருத ஆரம்பிக்க எம்பெருமான் அவன் மீது நின்று அவன்
    துள்ளலை அடக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளித்தார்
    அந்நிலையில் அவன் உக்கிரமாக ஆட அவன்மீது அமர்ந்து அவன்
    கொட்டத்தை முற்றிலும் அடக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி
    கொடுத்தார்.

    அப்போது அவன் தனது முழுபலத்தையும் பிரயோகித்து அசைந்து
    அசைந்து பூமிக்கு நடுக்கத்தை உண்டாக்க அவன் மீது படுத்து
    அவனை பாதாளத்திற்குள் அமுக்கி சயன திருக்கோலத்தில் காட்சி
    கொடுத்தார்.

    இவ்விதம் இவ்விடத்து எம்பெருமான் தனது நின்ற இருந்த கிடந்த
    என்னும் 3 திருக்கோலங்களை காட்டியருளினார்.

    பார்வதியின் வேண்டுகோளின்படியே எம்பெருமான் தனது மூன்று
    திருக்கோலங்களையும் இங்கே காட்டிக் கொடுத்ததாகவும் கூறுவர்.

    பிற ஸ்தலங்கட்குச் சொல்லப்பட்ட வரலாற்றுச் சான்றுகள்
    அத்தலத்தோடு ஒட்ட நிற்பவை போல் தோன்றுகின்றன. ஆனால்
    இங்கு பேசப்படும் ஸ்தல வரலாறுக்கும் பெருமான் திருக்கோலத்திற்கும்
    சம்பந்தமில்லை.

    மேலும் பார்வதி தேவி வாமனரைக் குறித்து தவமிருந்ததாய்
    கூறப்படுகிறது. ஆனால் காமாட்சியம்மன் கோவிலில் இருக்கும்
    மூர்த்தியோ வராஹ மூர்த்தியாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:11:09(இந்திய நேரம்)