தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • அருமாகடல் பெருமாள் கோவில் - திருச்சிறுபுலியூர்
    சிறப்புக்கள்
    1. புஜங்கசயனத்தில்     மிகச்சிறிய     உருவமாயிருந்ததைக்கண்டு
      திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட உமது குறைதீர நமது
      மிகப்பெரிய உருவை திருக்கண்ணமங்கையில் காணும் என்று
      பெருமாள் அருளிச் செய்த ஸ்தலம்.

    2. கருடனுக்கு அபயமளித்த இடம்.

    3. இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், மிக உயர்ந்த
      இடத்தில் ஆதிசேடனுக்கும் சன்னதி உள்ளது.

    4. கருடா சௌக்கியமா என்று கேட்டதற்கு அவரவர்கள் இருக்க
      வேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று
      சொல்லப்பட்ட ஸ்தலம்.

    5. ஸ்ரீரங்கத்தைப் போன்றே தெற்கு நோக்கிய சயனம்.

    6. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம்
      செய்யப்பட்டதாகும்.

    7. நாகதோஷம் நிவர்த்தியும் புத்திர சந்தான விருத்தியும்
      இத்தலத்திற்கு ஏற்பட்ட தனி மகத்துவம்.

    8. இத்தலத்தின் பெருமானை பூஜித்து வைகுண்டம் அடைந்த
      வியக்ர பாதரை பெருமாளின் திருவடிகளுக்கு அருகிலேயே
      பிரதிட்டை செய்துள்ளனர். அவருக்கும் இங்கு வழிபாடுகள்
      நடக்கின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:20:16(இந்திய நேரம்)