தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • அப்பக்குடத்தான் கோவில் - திருப்யர் நகர்
    சிறப்புக்கள்
    1. இத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததென்றும், ஸ்ரீரெங்கத்திற்கு
      முன்னதாக ஏற்பட்டதென்றும் அதனால் தான் கோயிலடி அதாவது
      ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்துக் கொடுத்த
      ஸ்தலமென்பதால் கோவிலடி என பெயர் பெற்றதாக கர்ண
      பரம்பரை.

    2. பஞ்ச ரங்கம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்கங்களில்
      இதுவும் ஒன்று.

      1. ஆதிரங்கம் - ஸ்ரீரெங்கப்பட்டினம் (மைசூர்)
      2. அப்பால ரெங்கம் - திருப்பேர் நகர்
      3. மத்தியரங்கம் - ஸ்ரீரெங்கம்
      4. சதுர்த்தரங்கம் - கும்பகோணம்
      5. பஞ்சரங்கம் - இந்தளூர் (மாயவரம்)

      இந்த பஞ்சரங்கத்தைப் பற்றி குறிப்பிடும்போது ஸ்ரீரங்கத்தை
      மத்தியரங்கம் என்று சொல்லுவதால் 5 இல் மத்திமமான 3வது
      இடத்தை ஸ்ரீரங்கம் பெற்றது. எனவே அப்பாலரங்கம்
      ஸ்ரீரங்கத்தைவிட முன்னானது என்னும் கருத்தை ஒப்பலாம்.

    3. நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார்,
      பெரியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் 33 பாக்களால்
      மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.

    4. நம்மாழ்வார் இப்பெருமானைப் பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்குச்
      சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம்
      செய்யப்பட்ட ஸ்தலம் இது தான். அதனால்தான் தலைப்பில்
      கொடுத்த பாடலில் அடங்கப் பிடித்தேன் அதாவது
      பெருமானுக்குள் “அடங்கப் பிடித்தேன்” என்றார் போலும்.

    5. இங்கு பெருமானுக்கு தினந்தோறும் இரவில் அப்பம் அமுது
      செய்துப் படைக்கப்படுகிறது. அப்பம் அமுது செய்து
      தினந்தோறும் படைக்கப்படும் திவ்ய தேசம் இது ஒன்றுதான்.

    6. ஸ்ரீரெங்க ராஜ சரிதபாணம் என்னும் நூல் இத்தலம் பற்றிய
      குறிப்புக்களை கொடுக்கிறது.

    7. இத்தலமும்,     சூழ்ந்துள்ள     இயற்கைக்     காட்சிகளும்
      திருமங்கையாழ்வாரின் பாடல்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

    8. காவிரிக் கரையில் ஒரு மேட்டின் மேல் அமைந்துள்ள
      இக்கோவில் தொலை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும்,
      கொள்ளிட நதியில் ஒரு கோணத்தில் இருந்து பார்ப்பதற்கும்
      பேரழகு வாய்ந்தது.

    9. ஆழ்வார்கள் ஒரு ஸ்தலத்தில் அனுபவிக்கும் பெருமாளை
      மற்றோர் ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்யும்போது மறக்க
      வொன்னா ஆற்றாமையால் மீண்டும் மங்களாசாசனம் செய்வது
      மரபும் வழக்கமுமாயிற்று.

      பேர் நகரில் வணங்கிப் போன பின்பும் அப்பக்குடத்தான்
      திருமங்கை மன்னனை விடாது பின் தொடர்கிறார். தம்மை விட்டு
      நீங்காத அந்த அர்ச்சாவதார சோதியை திருவெள்ளறை சென்று
      கண்டேன் என்று மீண்டும் மங்களாசாசனம் செய்கிறார். இதோ
      அப்பாடல்.,

      துளக்கமில் சுடரை, அவுணணுடல்
          பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
      அளப்பி லாரமு தையம ரர்க்கருள்
          விளக்கினை, சென்று வெள்ளறைக் காண்டுமே.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:39:23(இந்திய நேரம்)