தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • ஒப்பிலியப்பன் கோவில் - திருவிண்ணகர்

    மூலவர்

    ஒப்பிலயப்பன் (ஒப்பற்றவன்) உப்பிலியப்பன் உப்பில்லா பண்டம்
    ஏற்பவன் என்பது திருநாமம். திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற
    தோற்றம். நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்

    தாயார்

    பூமிதேவி (பூமிநாச்சியார் எனும் திருநாமம்)

    உற்சவர்

    மூலவருக்கும், தாயாருக்கும் உரிய அதே பெயர்கள். இங்கு
    பெருமாள் மட்டும் தனியே புறப்பாடு ஆவதே இல்லை. எப்போதும்
    பிராட்டியுடன் சேர்ந்தே செல்வார்.

    விமானம்

    சுத்தானந்த விமானம் (தரிசிப்பவருக்கு ஆனந்தம் தருவது) விஷ்ணு
    விமானம் என்றும் பெயர்.

    தீர்த்தம்

    அஹோராத்ர புஷ்கரணி (இரவு, பகலென்றில்லாமல் 24 மணி
    நேரமும் நீராடலாம் என்பதால் அ ஹோராத்ர தீர்த்தமாயிற்று) மற்றும்
    ஆர்த்தி புஷ்கரிணி, சார்ங்க தீர்த்தம், சூர்ய தீர்த்தம், இந்திர தீர்த்தம்.

    காட்சி கண்டவர்கள்

    மார்க்கண்டேயர், காவேரி, கருடன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:45:24(இந்திய நேரம்)