2. அற இலக்கியம்

திருக்குறள்

பாட அறிமுகம்
Introduction to Lesson


திரு+குறள் = திருக்குறள். சிறப்பு மிக்க குறுகிய இரண்டு அடிகளால் ஆன நூல் என்று பொருள்படும். இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. இது - 133 அதிகாரங்களும், 1330 குறட்பாக்களும் கொண்டுள்ளது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

இதற்குத் தமிழ் மறை, உலகப் பொதுமறை, முப்பால், பொய்யாமொழி எனப் பல பெயர்கள் வழங்குகின்றன.