2. அற இலக்கியம்

நாலடியார்

பாட அறிமுகம்
Introduction to Lesson


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்த நிலையில் கருதப்படுவது நாலடியார். நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்பது பழமொழி. இதில் இரண்டு என்பது திருக்குறளையும், நாலு என்பது நாலடியாரையும் குறிக்கின்றன. இந்நூலை நாலடி நானூறு என்றும் கூறுவர்.