2. அற இலக்கியம்

அற இலக்கியம்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

தனிமனித ஒழுக்கமும், சமுதாய வாழ்வியல் நெறிகளும் சிறப்புற்று அமைய உதவுவன அற இலக்கியங்களாகும். இவை மாந்தர்தம் மனமாசினைப் போக்கிச் செம்மையாக வாழ வழிகாட்டுகின்றன.

இந்த அற இலக்கியங்களுள் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு ஆகியவற்றிலிருந்து சில பாடல்கள் நமக்குப் பாடமாக இடம்பெற்றுள்ளன.