2. அற இலக்கியம்

நாலடியார்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  நாலடியார் ----------- நூல்களுள் ஒன்றாகும்.

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். .

2.  ‘நாலும் ---------- சொல்லுக் குறுதி’ என்பது பழமொழி.

‘நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி’ என்பது பழமொழி. .

3.  நாலடியாரை ----------- என்றும் கூறுவர்.

நாலடியாரை நாலடி நானூறு என்றும் கூறுவர்.

4.  நாலடியார் ------------ பலரால் பாடப்பெற்றதாகும்.

நாலடியார் சமண முனிவர் பலரால் பாடப்பெற்றதாகும்.

5.  சமண முனிவர்கள் பற்றிய --------- கிடைக்கவில்லை.

சமண முனிவர்கள் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை.

6.  பாண்டி நாட்டை விட்டு நீங்கும்போது ஒவ்வொருவரும் ஓலையில் ஒரு ---------- எழுதி விட்டுச் சென்றனர் எனக் கூறப்பெறுகிறது.

பாண்டி நாட்டை விட்டு நீங்கும்போது ஒவ்வொருவரும் ஓலையில் ஒரு செய்யுள் எழுதி விட்டுச் சென்றனர் எனக் கூறப்பெறுகிறது.

7.  அரிமாவுக்குப் பசிவந்த போதும் ------------ மேயாது.

அரிமாவுக்குப் பசிவந்த போதும் புல் மேயாது.

8.  நிலவு தன்னிடம் ---------- கொண்டிருக்கும்.

நிலவு தன்னிடம் களங்கம் கொண்டிருக்கும்

9.  பெரியோர்கள் தவறு கண்டு வருத்தமும் சினமும் கொண்டால் ------- தாங்க முடியாது.

பெரியோர்கள் தவறு கண்டு வருத்தமும் சினமும் கொண்டால் யாராலும் தாங்க முடியாது.

10.  கதிரவனின் ----------- கண்டு பனிநீர்த்துளிகள் மறைந்து போகும்.

கதிரவனின் வெயில் கண்டு பனிநீர்த்துளிகள் மறைந்து போகும்.