நாலடியார்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. நாலடியார் எந்தத் தொகை நூலுள் அடங்கும்?
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அடங்கும்.
2. திருக்குறளுக்கு அடுத்த நிலையில் கருதப்பெறும் அறநூல் எது?
திருக்குறளுக்கு அடுத்த நிலையில் கருதப்பெறுவது நாலடியார் ஆகும்.
3. நாலடியாரைப் பற்றிக் கூறப்படும் பழமொழி யாது?
‘நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி’ என்பது நாலடியாரைப் பற்றிக் கூறப்படும் பழமொழியாகும்.
4. நாலடியார் என்னும் நீதிநூலுக்கு வேறு பெயர் யாது?
நாலடியார் என்னும் நீதிநூலுக்கு வேறு பெயர் ‘நாலடி நானூறு’ என்பதாகும்.
5. நாலடியார் யாரால் பாடப் பெற்றதாகும்?
நாலடியார் சமண முனிவர்களால் பாடப் பெற்றதாகும்.
6. நாலடியார் எழுதப்பெற்றது பற்றிய செய்தி யாது?
பாண்டிய நாட்டில் தங்கியிருந்த சமண முனிவர்கள் நாட்டைவிட்டு நீங்கும்போது ஒவ்வொருவரும் ஓலையில் ஒரு செய்யுளை எழுதிவிட்டுச் சென்றனர் என்று கூறப்பெறுகின்றது.
7. குடிப்பிறப்பாளரின் சிறப்பு யாது?
குடிப்பிறப்பாளர் வறுமையுற்றபோதும் தம் கொள்கையிலிருந்து வழுவார்.
8. அரிமாவின் இயல்பு யாது?
அரிமா பசியால் துன்புற்றபோதும் புல் மேயாது.
9. சான்றோருடன் ஒப்பிட்டுக் கூறப்பெறுவது யாது?
சான்றோருடன் வானில் ஒளிவீசும் நிலவு ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.
10. நிலவைவிடச் சான்றோர் உயர்ந்தவராவது யாங்ஙனம்?
நிலவு தன்னிடம் களங்கத்தைக் கொண்டுள்ளது. சான்றோர்க்குக் களங்கம் ஏற்படுமானால் தம்மையே அழித்துக் கொள்வர்.