2. அற இலக்கியம்

பழமொழி

பாட அறிமுகம்
Introduction to Lesson


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்துகளைச் சுருக்கமாகக் கூறியதே பழமொழி யாகும். இதனை மூதுரை, முதுமொழி எனவும் கூறுவர்.

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழி அமைத்து பாடப் பெற்ற 400 வெண்பாக்களைக் கொண்ட நூல் பழமொழி நானூறு என்று வழங்கப்பெறுகிறது. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.