பழமொழி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. மக்கள் பட்டறிவால் பெற்ற கருத்துகளைச் சுருக்கமாகக் கூறுவதே -------- ஆகும்.
மக்கள் பட்டறிவால் பெற்ற கருத்துகளைச் சுருக்கமாகக் கூறுவதே பழமொழி ஆகும்.
2. பழமொழியை ------------ என்றும் கூறுவர்.
பழமொழியை மூதுரை / முதுமொழி என்றும் கூறுவர்.
3. இது நானூறு வெண்பாக்களைக் கொண்டதால் --------- என்றும் வழங்கப்பெறுகிறது.
இது நானூறு வெண்பாக்களைக் கொண்டதால் பழமொழி நானூறு என்றும் வழங்கப்பெறுகிறது.
4. பழமொழி என்னும் நீதிநூலை இயற்றியவர் ----------- ஆவர்.
பழமொழி என்னும் நீதிநூலை இயற்றியவர் முன்றுறையரையனார் ஆவர்.
5. இவரது சமயம் --------- ஆகும்.
இவரது சமயம் சமணம் ஆகும்.
6. பழமொழி ஆசிரியர் முன்றுறையரையனார் ஒரு ------------- ஆவர்.
பழமொழி ஆசிரியர் முன்றுறையரையனார் ஒரு சிற்றரசர் ஆவர்
7. இவரது காலம் கி.பி. ----------- நூற்றாண்டு என்பர்.
இவரது காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்பர்.
8. பாம்பின் காலை ----------- அறியும் என்பது பழமொழி.
பாம்பின் காலை பாம்பு அறியும் என்பது பழமொழி.
9. ஞாயிற்றைக் ---------- கொண்டு மறைக்க இயலாது.
ஞாயிற்றைக் கை கொண்டு மறைக்க இயலாது.
10. முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் ------------- அளித்தனர்.
முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் அளித்தனர்.