2. அற இலக்கியம்

பழமொழி

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  பழமொழி - பெயர்க்காரணம் கூறுக.

மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்துகளைச் சுருக்கமாகக் கூறியதே பழமொழியாகும்.

2.  பழமொழியின் வேறு பெயர்கள் யாவை?

இதன் வேறு பெயர்கள் மூதுரை, முதுமொழி என்பவையாகும்.

3.  பழமொழியில் இடம்பெற்ற பாடல்கள் எத்தனை?

பழமொழியில் இடம்பெற்ற பாடல்கள் 400 வெண்பாக்களாகும்.

4.  தொகை நூல்களுள் எதில் பழமொழி அடங்குகிறது?

தொகை நூல்களுள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இது அடங்குகிறது.

5.  பழமொழி இயற்றியவர் யார்?

பழமொழி இயற்றியவர் முன்றுறையரையனார்.

6.  முன்றுறையரையனார் காலம் எது?

முன்றுறையரையனார் காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டு.

7.  ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்ற பழமொழியில் விளக்கப்படும் கருத்து யாது?

அறிவிற் சிறந்தவரை அறிந்து கொள்வது அறிவிற் சிறந்தவர்க்கே இயலும் என்ற கருத்து விளக்கப்படுகிறது.

8.  நாய் பெற்ற தேங்காயை விளக்குக.

மற்றவர்களுக்குக் கொடுக்காமலும், தான் அனுபவிக்காமலும் சேர்த்து வைத்த செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றதாகும்.

9.  ‘ஞாயிற்றைக் கையால் மறைக்க இயலாது’ என்ற பழமொழியால் கூறப்படுவது யாது?

பரந்த அறிவாற்றல் கொண்டவரை குறைகூறி அவர் புகழை அழிக்க இயலாது.

10.  அறிமடமும் சான்றோர்க்கு அணியாவது யாங்ஙனம்?

முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் அளித்தவரைக் கேட்டு அறிந்துள்ளோம். எனவே, அறிமடமும் சான்றோர்க்கு அணியாகும்.