திருக்குறள்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. சிறப்புமிக்க குறுகிய இரண்டு அடிகளால் ஆனதால் ---------- என்று பெயர்.
சிறப்புமிக்க குறுகிய இரண்டு அடிகளால் ஆனதால் திருக்குறள் என்று பெயர்.
2. திருக்குறளை இயற்றியவர் --------- ஆவார்.
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார்.
3. திருக்குறள் ---------- அதிகாரங்களைக் கொண்டது.
திருக்குறள் 133 அதிகாரங்களைக் கொண்டது.
4. திருக்குறள் ------------- நூல்களுள் ஒன்றாகும்.
திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
5. திருக்குறள் அறம், பொருள், இன்பமென ---------- பெரும் பிரிவுகளைக் கொண்டது.
திருக்குறள் அறம், பொருள், இன்பமென மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது.
6. திருக்குறளின் காலம் ------------ என உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருக்குறளின் காலம் கி.மு.31 என உறுதி செய்யப்பட்டுள்ளது.
7. குற்றமறக் கற்று அதன்படி ----------- வேண்டும்.
குற்றமறக் கற்று அதன்படி நடக்க வேண்டும்.
8. கல்லாதவர் ---------- ஆவர்.
கல்லாதவர் கடையர் ஆவர்.
9. படிக்கப் படிக்க ------------ ஊறும்.
படிக்கப் படிக்க அறிவு ஊறும்.
10. கேடில்லாத விழுச்செல்வம் ---------- ஆகும்.
கேடில்லாத விழுச்செல்வம் கல்வி ஆகும்.