நாலடியார்
பயிற்சி - 3
Exercise 3
1. நாலடியார் யாரால் இயற்றப்பட்டது?
அ) நக்கீரர்
ஆ) சமண முனிவர்கள்
இ) சைவப் பெரியார்
ஈ) கபிலர்
ஆ) சமண முனிவர்கள்
2. நாலடியாரின் வேறு பெயர் என்ன?
அ) நாலடி நானூறு
ஆ) தமிழ் மறை
இ) நன்னெறி
ஈ) நீதிநூல்
அ) நாலடி நானூறு
3. ‘நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்பதில் ‘நாலு’ என்பது எதனைக் குறிக்கிறது?
அ) திருக்குறள்
ஆ) பழமொழி
இ) நாலடியார்
ஈ) நல்வழி
இ) நாலடியார்்
4. கொள்கையில் குன்றாதவர் யார்?
அ) ஆன்றோர்
ஆ) சான்றோர்
இ) முனிவர்
ஈ) குடிப்பிறப்பாளர்
ஈ) குடிப்பிறப்பாளர்
5. பசி வந்தபோதும் புல்லைத் தின்னாதது எது?
அ) மான்
ஆ) அரிமா
இ) சிறுத்தை
ஈ) யானை
ஆ) அரிமா
6. கதிரவனின் வெப்பம் கண்டு மறைவது எது என நாலடியார் கூறுகிறது?
அ) பனி நீர்
ஆ) கடல் நீர்
இ) ஆற்றுநீர்
ஈ) ஊற்றுநீர்
அ) பனி நீர்
7. குற்றமற்றவரிடம் எதனைச் செய்யாமை வேண்டும்?
அ) தீயன
ஆ) வெறுப்பன
இ) கொடியன
ஈ) இழிந்தன
ஆ) வெறுப்பன
8. பெரியவர்களுடன் சேர்ந்தவுடன் நீங்குவது எது?
அ) தீய பண்புகள்
ஆ) அறியாமை
இ) கல்லாமை
ஈ) இல்லாமை
அ) தீய பண்புகள்