2. அற இலக்கியம்

பழமொழி

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  பழமொழி உருவாகக் காரணம் யாது?

அ) பட்டறிவு

ஆ) படித்த அறிவு

இ) சிந்தனை

ஈ) மருத்துவ நூல்கள்

அ) பட்டறிவு

2.  பழமொழியின் வேறு பெயர் யாது?

அ) நல்லுரை

ஆ) நல்வழி

இ) மூதுரை

ஈ) முதுமொழி

இ) மூதுரை

3.  இது எந்தத் தொகை நூலுள் அடங்கும்?

அ) எட்டுத் தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) பதினெண் கீழ்க்கணக்கு

ஈ) நீதிநூல்

இ) பதினெண் கீழ்க்கணக்கு

4.  பழமொழியை இயற்றியவர் யார்?

அ) கம்பர்

ஆ) நல்லாதனார்

இ) ஒளவை

ஈ) முன்றுறையரையனார்

ஈ) முன்றுறையரையனார்

5.  முன்றுறையரையனார் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர்?

அ) சைவம்

ஆ) வைணவம்

இ) சமணம்

ஈ) புத்தம்

இ) சமணம்

6.  ‘அரையன்’ என்பது யாரைக் குறிக்கிறது?

அ) அரசர்

ஆ) அமைச்சர்

இ) குரு

ஈ) தளபதி

அ) அரசர்

7.  இவர் வாழ்ந்த காலம் யாது?

அ) 10ஆம் நூற்றாண்டு

ஆ) 8ஆம் நூற்றாண்டு

இ) 5ஆம் நூற்றாண்டு

ஈ) முதல் நூற்றாண்டு

ஆ) எட்டாம் நூற்றாண்டு

8.  பாம்பின் காலை யார் அறிவார்?

அ) மனிதர்

ஆ) விலங்கு

இ) பறவை

ஈ) பாம்பு

ஈ) பாம்பு

9.  எதனைக் கையால் மறைக்க இயலாது?

அ) சந்திரன்

ஆ) சூரியன்

இ) விண்மீன்

ஈ) மலை

ஆ) சூரியன்

10.  முல்லைக் கொடிக்குக் கொடுக்கப்பெற்றது எது?

அ) கொம்பு

ஆ) பந்தல்

இ) தேர்

ஈ) பொருள்

இ) தேர்