1. வாழ்த்து

இறை வாழ்த்து

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


உங்களுக்குப் பாடமாக வந்துள்ள இப்பாடலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை ஆவார். இவர் பெற்றோர் சவரிமுத்துப் பிள்ளை ஆரோக்கிய மேரி ஆவர். இவர் திருச்சிக்கு அருகிலுள்ள குளத்தூரில் பிறந்தார். மயிலாடுதுறை என்னும் மாயூரத்தில் “முனிசீப்” ஆகப் பணியாற்றி ‘நீதி நாயகர்’ என மக்களால் போற்றப் பெற்றார்.

கிறித்தவ சமயத்தைச் சார்ந்த இவர் சிறந்த தமிழ்ப்புலமை பெற்றவர். இவரே தமிழில் முதல் ‘நாவலான’, ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதியவர். இவரது வேறு நூல்கள் பெண்கல்வி, சுகுண சுந்தரிமாலை, சர்வ சமயக் கீர்த்தனைகள், நீதி நூல் திரட்டு முதலியனவாகும். இவரது காலம் கி.பி. 1826-1889.

நம் பாடப் பகுதி ‘நீதி நூல் திரட்டு’ என்னும் இவரது நூலில் இடம் பெற்றுள்ளது.