உலக வாழ்த்து
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. இளங்கோவடிகள் ---------- என்னும் காப்பியத்தை இயற்றினார்.
இளங்கோவடிகள்சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றினார்.
2. இளங்கோவடிகள் இளமையிலேயே --------- பூண்டார்.
இளங்கோவடிகள் இளமையிலேயேதுறவு பூண்டார்.
3. இளங்கோவடிகளின் தந்தை --------- நெடுஞ்சேரலாதன்.
இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
4. சேரன் -------- இளங்கோவடிகளின் அண்ணன்.
சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகளின் அண்ணன்.
5. இளங்கோவடிகள் ----------- ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்று அறிஞர் கூறுவர்.
இளங்கோவடிகள் 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்று அறிஞர் கூறுவர்..
6. இளங்கோவடிகளின் தாயார் ---------- என்பவராவார்.
இளங்கோவடிகளின் தாயார் நற்சோணை என்பவராவார்
7. ‘இளங்கோ நாடாள்வார்’ என்று --------- கூறினான்.
இளங்கோ நாடாள்வார்’ என்று கணியன் கூறினான்.
8. சோழனின் வெண்கொற்றக் குடைபோல --------- உலகைக் காக்கும்.
சோழனின் வெண்கொற்றக் குடைபோல நிலவு உலகைக் காக்கும்.
9. சோழனின் ஆணைச்சக்கரம் போல வலம் வரும் -------- போற்றுவோம்.
சோழனின் ஆணைச்சக்கரம் போல வலம் வரும் கதிரவன் போற்றுவோம்.
10. சோழனின் கருணை நெஞ்சம் போல உலகைக் காக்கும் ------- போற்றுவோம்.
சோழனின் கருணை நெஞ்சம் போல உலகைக் காக்கும் மழை போற்றுவோம்.