உலக வாழ்த்து
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. ‘உலக வாழ்த்து’ பாடல் இடம் பெற்ற நூல் எது?
உலக வாழ்த்து’ இடம் பெற்ற நூல் சிலப்பதிகாரமாகும்.
2. உலக மக்களை எவ்வாறு மதிக்க வேண்டும்?
உலக மக்களை மானுடமாக மதிக்க வேண்டும்.
3. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
4. இளங்கோவடிகளின் பெற்றோர் யாவர்?
இளங்கோவடிகளின் பெற்றோர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோணை ஆவர்.
5. இளங்கோவடிகளின் அண்ணன் யார்?
இளங்கோடிவகளின் அண்ணன் சேரன் செங்குட்டுவன் ஆவார்.
6. இளங்கோவடிகள் இளமையிலேயே ஏன் துறவு பூண்டார்?
கணியனின் கூற்றைப் பொய்யாக்கும் பொருட்டு இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டார்.
7. இளங்கோவடிகளின் காலமாக அறிஞர் கூறுவது யாது?
இளங்கோவடிகளின் காலம் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிஞர் கூறுவர்.
8. நிலவை ஏன் போற்ற வேண்டும்?
சோழ மன்னனின் வெண் கொற்றக் குடையைப் போல குளிர்ந்த ஒளி தந்து உலகைக்காப்பதால்.
9. கதிரவனை ஏன் போற்ற வேண்டும்?
சோழ மன்னனின் ஆணைச் சக்கரம் போல இமய மலையை வலம் வருவதால்.
10. மாமழையை ஏன் போற்ற வேண்டும்?
நீரைப் பொழிந்து இந்த நிலவுலகத்தைக் காத்து வருவதால் மாமழையைப் போற்ற வேண்டும்.