மொழி வாழ்த்து
பாடல் கருத்து
Theme of the Poem
தமிழ் மொழியானது பரந்து விரிந்துள்ள ஆழம் மிக்க கலை என்னும் கடலைக் கடந்து கரை காண்பதற்குத் தெப்பமாய் இருப்பது; மக்களிடம் நிலை பெற்றிருக்கும் அறிவிற்கு ஒப்பற்ற துணையாய் இருந்து உதவுவது; பல வகைகளில் தடுமாறும் மனத்தினை அமைதி பெறச் செய்வதற்கு வழியாய் அமைவது; ஓங்கி உயர்ந்த மலையில் ஏற்றப்பட்ட விளக்கு ஒளி போன்று, மறைப்பின்றி எல்லாருக்கும் அறிவொளியைத் தருகின்ற தெளிவும், எளிமையும் கொண்டது.
இத்தகைய தமிழ் மொழியில் கொல்லாமை, பொய்யாமை முதலியன தலையாய அறங்களாகும்; இவ்விரு அறங்களில் மற்ற எல்லா அறங்களின் பயன்களும் இருப்பதை அறிந்து, மொழி, செயல், மனம் ஆகிய மூன்றாலும் தொழுது வணங்கியவராகிய நல்லவர்கள் தொண்டு செய்த தமிழ்மொழி எந்நாளும் வாழ்க.