1. வாழ்த்து

இறை வாழ்த்து

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  ‘நீதி நாயகர்’ என மக்களால் போற்றப் பெற்றவர் யார்?

அ) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

ஆ) தேசிக விநாயகம் பிள்ளை

இ) வேதநாயகம் பிள்ளை

ஈ) பேரா. சுந்தரம் பிள்ளை

இ) வேதநாயகம் பிள்ளை

2.  கதிரவன் கடவுளைத் தொழும் கை எது?

அ) வெப்பம்

ஆ) கிரணம்

இ) வெளிச்சம்

ஈ) தீப்பொறி

ஆ) கிரணம்

3.  பறவைகள் எவ்வாறு இறைவனைத் தொழும்?

அ) போற்றி

ஆ) புகழ்ந்து

இ) ஆடிப்பாடி

ஈ) தேடி ஓடி

இ) ஆடிப்பாடி

4.  மரம் செடி கொடிகள் எவற்றைத் தூவி வணங்கும்?

அ) இலைகள்

ஆ) தளிர்கள்

இ) சருகுகள்

ஈ) மலர்கள்

ஈ) மலர்கள்

5.  ஐம்பூதங்கள் என்ன செய்து இறைவனை ஏத்தும்? ?

அ) தொழில்

ஆ) ஓதுதல்

இ) பாடல்

ஈ) ஆடல்

அ) தொழில்

6.  கடல் இறைவனை எதனால் வாழ்த்தும்?

அ) ஒளியால்

ஆ) ஒலியால்

இ) அலையால்

ஈ) நுரையால்

ஆ) ஒலியால்

7.  வேதநாயகம் பிள்ளை எழுதிய முதல் ‘நாவல்’ எது?

அ) சோழர் வரலாறு

ஆ) சேரர் வரலாறு

இ) பாண்டியர் வரலாறு

ஈ) பிரதாப முதலியார் சரித்திரம்

ஈ) பிரதாப முதலியார் சரித்திரம்

8.  நம் இறைவாழ்த்துப் பாடல் இடம் பெற்ற நூல் எது?

அ) நீதி நெறி விளக்கம்

ஆ) நீதிநூல் திரட்டு

இ) நீதிநூல்

ஈ) நல்வழி

ஆ) நீதிநூல் திரட்டு

9.  வேதநாயகம் பிள்ளை எங்குப் பணியாற்றினார்?

அ) திருச்சி

ஆ) குளத்தூர்

இ) மாயூரம்

ஈ) சென்னை

இ) மாயூரம்

10.  வேதநாயகம் பின்பற்றிய சமயம் யாது?

அ) சைவம்

ஆ) வைணவம்

இ) சமணம்

ஈ) கிறித்தவம்

ஈ) கிறித்தவம்