1. வாழ்த்து

உலக வாழ்த்து

பாடல்
Poem


உலக வாழ்த்து

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிங்(கு)

அங்கண் உலகளித்த லான்

 

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு

மேரு வலந்திரித லான்

 

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலி யுலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான்சுரத்த லான்.

- இளங்கோவடிகள்