இறை வாழ்த்து
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. ‘நீதி நூல் திரட்டு’ என்னும் நூலை எழுதியவர் யார்?
‘நீதி நூல் திரட்டு’ என்னும் நூலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.
2. வேதநாயகம் பிள்ளையின் பெற்றோர் யாவர்?
வேதநாயகம் பிள்ளையின் பெற்றோர் சவரி முத்துப் பிள்ளை - ஆரோக்கிய மேரி ஆவர்.
3. மாயூரம் வேதநாயகம் பிறந்த ஊர் எது?
மாயூரம் வேதநாயகம் பிறந்த ஊர் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள குளத்தூர் ஆகும்.
4. வேதநாயகம் மாயவரத்தில் என்ன பணிபுரிந்தார்?
வேதநாயகம் மாயவரத்தில் ‘முனிசீப்பாகப்’ பணிபுரிந்தார்.
5. வேதநாயகம் தமிழில் எழுதிய முதல் 'நாவல்' எது?
வேதநாயகம் தமிழில் எழுதிய முதல் நாவல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்பதாகும்.
6. கதிரவன் இறைவனை எங்ஙனம் வணங்கும்?
கதிரவன் இறைவனைக் கதிர்களாகியக் கைகளால் வணங்கும்.
7. பறவைக் கூட்டங்கள் இறைவனை எவ்வாறு துதிக்கும்?
பறவைக் கூட்டங்கள் ஆடிப்பாடி இறைவனைத் துதிக்கும்.
8. மரங்கள் எவ்வாறு இறைவனைப் போற்றும்?
மரங்கள் மலர்தூவி இறைவனைப் போற்றும்.
9. ஐம்பூதங்கள் கடவுளை எவ்வாறு வணங்குகின்றன?
ஐம்பூதங்களும் தத்தம் தொழில் செய்து கடவுளை வணங்குகின்றன.
10. அலைகடல் எவ்வாறு கடவுளை வாழ்த்தும்?
அலைகடல் பேரொலியை எழுப்பிக் கடவுளை வாழ்த்தும்.