1. வாழ்த்து

இறை வாழ்த்து

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  வேதநாயகம் பிள்ளை திருச்சிக்கு அருகிலுள்ள ---------- என்ற ஊரில் பிறந்தார்.

வேதநாயகம் பிள்ளை திருச்சிக்கு அருகிலுள்ள குளத்தூர் என்ற ஊரில் பிறந்தார்.

2.  வேதநாயகம் பிள்ளையின் தந்தையார் பெயர் ---------

வேதநாயகம் பிள்ளையின் தந்தையார் பெயர் சவரிமுத்துப் பிள்ளை.

3.  மாயூரம் வேதநாயகம் மக்களால் --------- என்று போற்றப்பெற்றார்.

மாயூரம் வேதநாயகம் மக்களால் நீதிநாயகர் என்று போற்றப்பெற்றார்.

4.  மாயூரம் வேதநாயகம் தமிழில் -------- எழுதினார்.

மாயூரம் வேதநாயகம் தமிழில்முதல் நாவல் எழுதினார்.

5.  கதிரவன் கிரணமாகிய ----------- கடவுளைத் தொழுகிறான்.

கதிரவன் கிரணமாகிய கையால் கடவுளைத் தொழுகிறான்.

6.  பறவைகள் ---------- பாடியும் இறைவனைத் துதி செய்யும்.

பறவைகள் ஆடியும் பாடியும் இறைவனைத் துதி செய்யும்.

7.  மரங்கள் மலர்கள் --------- கடவுளைப் போற்றும்.

மரங்கள் மலர்கள் தூவி கடவுளைப் போற்றும்.

8.  தொழில் செய்து --------- கடவுளை ஏத்தும்.

தொழில் செய்து ஐம்பூதங்கள் கடவுளை ஏத்தும்.

9.  ஒலிக்கின்ற கடல் -------- இறைவனை வாழ்த்தும்.

ஒலிக்கின்ற கடல் ஒலியால் இறைவனை வாழ்த்தும்.

10.  மனமே நீ இறைவனை ----------- வணங்காது இருப்பது ஏனோ?

மனமே நீ இறைவனை வாழ்த்தி வணங்காது இருப்பது ஏனோ?