மொழி வாழ்த்து
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. தமிழ்நாட்டு மக்களின் ---------- தமிழாகும்.
தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி தமிழாகும்.
2. நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் ---------
நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் மோகனூர்.
3. நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் ---------
நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் வெ. இராமலிங்கனார்.
4. வெ. இராமலிங்கனார் பிறந்த நாள் --------
வெ. இராமலிங்கனார் பிறந்த நாள் 19.10.1888
5. காந்தியடிகளின் தலைமையில் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டமையால் ----------- எனச் சிறப்பிக்கப்பெற்றார்.
காந்தியடிகளின் தலைமையில் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டமையால் காந்தியக் கவிஞர் எனச் சிறப்பிக்கப்பெற்றார்.
6. மக்கள் வாழ்வில் சிறப்பிடம் பெறுவது ----------
மக்கள் வாழ்வில் சிறப்பிடம் பெறுவது தாய்மொழி
7. கொல்லாமையும், --------- யும் மிகச் சிறந்த இரண்டு அறங்களாகும்.
கொல்லாமையும் பொய்யாமை யும் மிகச் சிறந்த இரண்டு அறங்களாகும்.
8. நல்லவர்கள் சொல், ---------, மனத்தால் வணங்குவர்.
நல்லவர்கள் சொல், செயல், மனத்தால் வணங்குவர்.
9. மலை உச்சியில் வைக்கப்பெற்ற -------- போல மறைவற்ற தமிழ் மொழி.
மலை உச்சியில் வைக்கப்பெற்ற ஒளி போல மறைவற்ற தமிழ் மொழி.
10. நல்லவர்கள் தொண்டு செய்த ----------- எந்நாளும் வாழ்க.
நல்லவர்கள் தொண்டு செய்த தமிழ்மொழி எந்நாளும் வாழ்க.