மொழி வாழ்த்து
பயிற்சி - 3
Exercise 3
1. ‘நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்பெறுபவர் யார்?
அ) சுப்புரத்தினம்
ஆ) சுரதா
இ) தமிழ் ஒளி
ஈ) இராமலிங்கனார்
ஈ) இராமலிங்கனார்
2. வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் எது?
அ) சேலம்
ஆ) நாமக்கல்
இ) மோகனூர்
ஈ) திருச்சி
இ) மோகனூர்
3. விடுதலைப் போராட்டத்தில் அண்ணல் காந்தியடிகளுடன் பங்கு கொண்டதால் இவர் இவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்
அ) கவிமணி
ஆ) தேசியக் கவிஞர்
இ) காந்தியக் கவிஞர்
ஈ) விடுதலைக் கவிஞர்
இ) காந்தியக் கவிஞர்
4. நாமக்கல் கவிஞர் பிறந்த ஆண்டு எது?
அ) 1800
ஆ) 1808
இ) 1888
ஈ) 1788
இ) 1888
5. வெ. இராமலிங்கனார் மறைந்த ஆண்டு எது? ?
அ) 1792
ஆ) 1972
இ) 1872
ஈ) 1982
ஆ) 1972
6. கலை என்ற கடலைக் கடப்பதற்குத் தெப்பமாக உதவுவது எது?
அ) தேசியமொழி
ஆ) அறிவியல்மொழி
இ) ஆட்சிமொழி
ஈ) தாய்மொழி
ஈ) தாய்மொழி
7. மலை உச்சியில் உள்ள ஒளி போல மறைவற்றது எது?
அ) தமிழ்மொழி
ஆ) நிலவொளி
இ) கதிரவ ஒளி
ஈ) விண்மீன்
அ) தமிழ்மொழி
8. சிறந்த அறங்களில் முதன்மையான ஒன்றினைக் கூறுக.
அ) கள்ளாமை
ஆ) கொல்லாமை
இ) வெகுளாமை
ஈ) வெஃகாமை
ஆ) கொல்லாமை
9. சொல், செயல், மனம் மூன்றாலும் தமிழைத் தொழுதோர் யாவர்?
அ) வல்லோர்
ஆ) அறவோர்
இ) நல்லோர்
ஈ) அறிவோர்
இ) நல்லோர்
10. அலைபாயும் மனத்திற்கு எது தேவை?
அ) கல்வி
ஆ) அறிவு
இ) அன்பு
ஈ) அமைதி
ஈ) அமைதி