1.வாழ்த்து

உலக வாழ்த்து

பாட அறிமுகம்
Introduction to Lesson


‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வாழ்ந்த தமிழ் மக்கள் உலகப் பார்வை கொண்டவர்கள். திரை கடல் ஓடித் திரவியம் தேடியவர்கள். சாதி, மத, இன, நிற பேதங்களைக் கடந்தவர்கள். உலக மக்களை மானுடமாகவே மதித்தவர்கள்.அதனால் உலகை வாழ்த்துவது உலக மக்களை வாழ்த்துவதாகும். நமது பாடப்பகுதி சிலப்பதிகாரக் காப்பியத்தில் இடம் பெற்றதாகும். இக்காப்பியம் புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று பகுதிகளைக் கொண்டது. இது இயல், இசை, நாடகம் கொண்ட முத்தமிழ்க் காப்பியம் என்றும் போற்றப் பெறுகிறது.